தமிழில் தேசிய கீதம் பாடுவது சிறந்ததே – பிரதமர்!
Tuesday, February 28th, 2017தமிழில் தேசிய கீதம் பாடுவது மிகவும் நல்ல விடயமேயாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிராமிய பொருளாதார அமைச்சின் புதிய கட்டட அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
நாட்டில் தேசிய ஒற்றுமையை உறுதி செய்ய வேண்டும், வெறுமனே அடித்துக் கொள்வதில் எவ்வித பயனும் கிடையாது. வேறு நாடுகளுக்கு செல்லக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும் சிலர் இலங்கையிலேயே தங்கியிருக்கின்றார்கள்.அதற்கான காரணங்கள் என்ன நாடு மீது அவர்கள் கொண்டுள்ள பற்றுதான் அதற்கு காரணமாகும்.
ஸ்ரீலங்கா தாயே என தமிழ் பிள்ளைகள் தமிழில் மொழியில் தேசிய கீதம் இசைப்பது எவ்வளவு நல்ல விடயமாகும். நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என அர்த்தப்படுத்துவது சிறந்தது அல்லவா.தெரிந்த தமிழ் மொழியில் தேசிய கீதம் பாட அனுமதிப்பதா அல்லது அவர்களை வாயை மூடிக்கொண்டிருக்குமாறு அறிவிப்பதா?
தமிழ் தெரிந்தவர்கள் தமிழ் மொழியிலும் சிங்களம் தெரிந்தவர்கள் சிங்கள மொழியிலும் தேசிய கீதம் பாடுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தியுள்ளோம். நாட்டின் அனைத்து இலங்கையர்களும் தற்போது தேசிய கொடிக்கு மதிப்பளிக்கின்றனர். இவ்வாறு தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பி நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
Related posts:
|
|