தப்பிச் சென்றவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்கிறது!

Thursday, February 2nd, 2017

சேவையில் இருந்து தப்பிச் சென்ற முப்படை உறுப்பினர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரோஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி முதல் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரோஷான் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.  இதேவேளை, முப்படையில் இருந்து விலகியவர்கள் சேவையில் இருந்து சட்டப்படி வெளியேற கடந்த டிசம்பர் 31ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது.

எனினும் இந்த வாய்ப்பை பயன்படுத்தாது 42,000 பேருக்கும் அதிகமானோர் இருப்பதாக, ரோஷான் செனவிரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.  இதேவேளை, கடந்த ஜனவரி தொடக்கம் இதுபோன்று 313 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  இதற்கமைய கடற்படையில் இருந்து 133 பேரும், விமானப் படையில் இருந்து 11 பேரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

arrest196

Related posts:

இன்றும் சுழற்சி முறையில் 4 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் மின்வெட்டு - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்கு...
கொட்டி தீர்க்க போகும் கனமழை - வடக்கு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் விடுக்கப்பட்டது எச்சரிக...
மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் ...