தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: அபராதம் செலுத்த மாற்று வழி!

Wednesday, December 21st, 2016

மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை செலுத்த அசௌகரியங்களை எதிர்நோக்கும் மக்களுக்காக அனைத்து மாவட்ட அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களிலும் விஷேட கவுண்டர் ஒன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தபால் ஊழியர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் காரணமாக, அபராதம் செலுத்த வாகன சாரதிகள் சிரமப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.  இதன் பொருட்டு, அனைத்து மாவட்ட அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களிலும் விஷேட கவுண்டர் ஒன்றை நிறுவ உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தனவால், அந்த அமைச்சின் செயலாளர் நீல் டி அல்விசுக்கு, பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறித்த அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இதன்படி, மோட்டார் வாகன ஆணையாளர் அலுவலகத்துடன் கலந்துரையாடி விரைவில் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

S9630015

Related posts: