தபால் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு!

Tuesday, July 18th, 2017

வாள்வெட்டுக்கு இலக்காகிய தபால் உத்தியோகத்தர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு உடையார்க்கட்டைச் சேர்ந்த குணபாலன் வயது 50 என்பவரே இவ்வாறு சிகிச்சை பெற்று வருபவராவார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த உத்தியோகத்தரின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவரடன் உரையாடிக் கொண்டிருந்த சமயம் திடீரென கழுத்தை நோக்கி வாளினால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் படுகாயமடைந்த இந்த உத்தியோகத்தர் முல்லைத்திவு மாஞ்சோலை வவ்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: