தபால் அதிபர்களுக்குப் பயிற்சிகள்!

Saturday, November 19th, 2016
யாழ்.பிரதம தபாலக அஞ்சல் பயிற்சிக் கல்லூரியில் தரம் மூன்றைச் சேர்ந்த தபால் அதிபர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.
போட்டிப் பரீட்சை மூலம் அரசினால் அண்மையில் தெரிவு செய்யப்பட்ட 355 தபால் அதிபர்களில் 49பேருக்கு யாழ்ப்பாண அஞ்சல் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. அவர்களுக்கான 3 வாரகாலப் பயிற்சி எதிர்வரும் 25ஆம் திகதி நிறைவு பெறும் என்று அஞ்சல் பயிற்சிக் கல்லூரியினர் தெரிவித்துள்ளனர். பயிற்சியை நிறைவ செய்யும் தரம் மூன்றைச் சேர்ந்த இந்த 49 தபால் அதிபர்களும் வெற்றிடமாகவுள்ள தபால் நிலையங்களுக்கு நியமனம் பெறுவார்கள் என்றும் தபால் திணைக்களம் தெரிவித்தது.

post_logo1

Related posts: