தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணத்தில் தொடர்கிறது!

மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் மக்களை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையில் யாழ். மருத்துவ பீட மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக கூடிய மாணவர்கள், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதேவேளை, கையெழுத்துக்களையும் சேகரித்து வருகின்றனர்.
தனியார் மருத்துவ கல்லூரிகள் குறித்து அரசாங்கத்திற்கு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில் இதற்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை நாடுமுழுவதும் போராட்டம் தொடருமென குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த விழிப்புணர்வு நடவடிக்கையானது நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகள், தொழிநுட்பக் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகளில் முன்னெடுக்கப்படுமென யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
|
|