தனியார் பேருந்துகளுக்கு இ.போ.ச வுக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

பொது போக்குவரத்தில் ஈடுபடுகின்ற தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நிதியமைச்சர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கனியவள கூட்டுதாபனத்தின் விலையின் கீழ் இவ்வாறு பேருந்துகளுக்கு டீசல் வழங்கப்படவுள்ளது. இதுதொடர்பான மதிப்பீட்டு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஒரு தேசிய இனத்தின் மீட்சிக்கு கலை இலக்கியப் படைப்புக்களும் பங்காற்றவேண்டும் -ஈ.பி.டி.பியின் சர்வதேச ...
வடமராட்சியின் பல பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் உதவித் திட்டங்கள் வழங்கிவைப்பு!
கொரோனா அச்சுறுத்தல்: 500 மில்லியன் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறி - ஐ.நா!
|
|