தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 577 பேர் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 577 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 63 ஆயிரத்து 908 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்று மேல்மாகாணத்திற்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 13 சோதனை சாவடிகளில், 994 வாகனங்களில் பயணித்த ஆயிரத்து 796 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குடாநாட்டில் இந்தமுறை 130ஹெக்ரேயரில் உருளைக்கிழங்கு செய்கை - யாழ்.மாவட்ட விவசாயப் பணிப்பாளர்!
இலங்கையை இலக்கு வைத்து சைலன்ஸ் குழு இணையக்கொள்ளை!
நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்...
|
|