தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 674 பேர் கைது – பொலிசார் தகவல்!

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 67 ஆயிரத்து 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம்முதல் இதுவரை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 674 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், மேல் மாகாணத்தில் 13 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கழிவு முகாமைத்துவம் தொடர்பில் தேசிய கொள்கை தயாரிப்பதற்கான யோசனைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவ...
கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருக்கு சிறந்த சேவைகளை நல்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - சுங்க அதிகாரி...
85 வீதமான கொரோனா மரணங்கள் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கே நேர்ந்துள்ளன - சுகாதார மேம்பாட்டு ப...
|
|