தனிமைப்படுத்தலுக்கு அழைத்துவரப்பட்டமை தொடர்பில் தெரியாது! வடக்கு சுகாதாரப் பணிப்பாளர் தெரிவிப்பு

Friday, April 24th, 2020

வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு எதுவும் தெரியாது என சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி .கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்..

அத்துடன் வடக்கு மாகாணத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் இராணுவத் தளபதியிடம் கேட்டபோது, வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் மற்றும் அந்தந்த மாவட்டச் செயலர்களிடம் விவரங்களைக் கேட்குமாறு கூறினார்.

இது தொடர்பில் மாவட்டச் செயலர்களிடமோ, வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினரிடமோ அது தொடர்பான விவரங்கள் இல்லை என்று அவர்கள் பதிலளித்தனர்.

இராணுவ முகாமில் மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தல் தொடர்பான விவரங்கள் எங்களுக்குத் தெரிவிக்கப்படமாட்டாதுஎன்று வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

Related posts: