தனித்துவிடப்படும் முதியவர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்க வருகின்றது சட்டம்!

Tuesday, November 1st, 2016

நடுவீதியில் தனித்துவிடப்படும் முதியவர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்க புதிய சட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லயில் இடம்பெற்ற சமூக சேவைகள் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றுகையில் இந்த விடயர்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் வீதிகளில் நிர்க்கதியாக்கப்பட்டு முதியோர் இல்லங்களால் பொறுப்பேற்கப்பட்ட நிலையில் மரணத்தை தழுவும் முதியவர்களின் சொத்துக்கள் பெரும்பாலும் உறவினர்களுக்கு சொந்தமாகின்றன. இதன் காரணமாக சமூக சேவைகள் திணைக்களம் பல சிக்கல்களை எதிர்கொள்கிறதென சுட்டிக்காட்டினார்.

நடுவீதியில் தனித்துவிடப்பட்ட நிலையில் மீட்கப்படும் முதியவர்களின் புகைப்படங்களையும் தகவல்களையும் பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும். அதன் ஊடாக உறவினர்களை கண்டறிவது அவசியமென அமைச்சர் கூறினார்.

Sb_CI.png

Related posts: