தண்டப்பணத்தை அதிகரிக்க திட்டம்!

புகையிரதங்களில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைக்காக அறவிடப்படும் தண்டப் பணத்தை மூவாயிரம் ரூபாவாக அதிகரிக்க புகையிரத திணைக்களம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத மிதிபலகையில் பயணித்தல், புகையிரதம் நிறுத்தும் முன்னர் இறங்குதல், புகையிரதத்திற்குள் புகைத்தல், மது அருந்துதல் மற்றும் ஏனைய பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட தவறுகளுக்கே தண்டப்பணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், புகையிரதத்தில் யாசகம் செய்வோர் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் குறித்த தண்டப்பணம் அறவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை குறித்த தவறுகளுக்காக 100 ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டு வந்தது. எனினும், பயணிகளால் கிடைத்து வரும் அதிக முறைபாடுகள் காரணமாக இந்த தண்டப்பணத்தை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இயற்கைப் பசளை தரத்திற்கான திருத்தச் சட்டம் உருவாக்கல் தொடர்பாக மக்கள் கருத்து!
அன்னாசிச் செய்கையில் ஈடுபடுவதற்கு ஆர்வம்!
நாடாளுமன்ற அறிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பும் மொழிகளில் பெற நடவடிக்கை - சபாநாயகர்!
|
|