தடை செய்யப்பட்ட பாடல்களை செவிமடுத்தார் எனும் குற்றச் சாட்டில் 25 வயது இளைஞன் கைது!
Friday, April 22nd, 2016தடை செய்யப்பட்ட புலிகளின் பாடல்களைச் செவிமடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை(21-03-2016) மாலை சிவில் உடையில் சென்ற பொலிஸாரினாலேயே 25 வயதுடைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
கைது செய்யப்பட்ட இளைஞன் நேற்று மாலை யாழ். நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
குடாநாட்டில் திருட்டுக்கள் அதிகரிப்பு : அச்சத்தில் மக்கள்!
போலி தகவல்களை வழங்கும் கொரோனா நோயாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ...
மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்களை விடுவிக்க நடவடிக்கை - இலங்கை சுங்க பிரிவு தகவல்!
|
|