தங்கம் கடத்திய இரு பெண்கள் கைது!

Saturday, August 27th, 2016

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திய இரு பெண்கள் நேற்றையதினம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

UL165  என்ற ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் விமானம் மூலம் கொச்சி சென்ற இவர்கள்  மீது  சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே கடத்தி வரப்பட்ட தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்கள் மீட்க்கப்பட்டுள்ளன. இதற்கமைய கைது செய்யப்பட்ட பெண்களிடமிருந்து 26 லட்சம் இந்திய ரூபா பெறுமதியான 832கிராம் தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: