தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
Monday, April 17th, 2017
வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் இடம்பெற்றுள்ள மோதல் நிலையால், மூன்றாவது உலகப் போர் ஒன்று உருவாகும் என்ற நிலை தோன்றியுள்ளதால் உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1288 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும் விரைவில் 1300 அமெரிக்க டொலராக உயர்வடையலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்லுவார்கள். ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நான்கு சவரன். இது சொக்கத் தங்கம், 24 கரட் தங்கம்.
எதிர்வரும் 28ஆம் திகதி அட்சயதிருதியை வர இருக்கின்றது. இதனால் தங்கம் வாங்குவதற்கு காத்திருக்கும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
12 மணியுடன் பாடசாலைகளை மூடுவதற்கு வடமத்திய மாகாண முதலமைச்சர் முடிவு!
2018 இல் 35 அதிகாரிகள் உட்பட 40 பேர் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது!
உள்ளூராட்சி தேர்தல் 2023 - கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம் இன்று மதியம் 12 அணியுடன் நிறைவு - நாள...
|
|