தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!

Friday, February 8th, 2019

தேசிய பயிலுநர் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ் பெறுவதற்கான இலவச பயிற்சி நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், மானிப்பாய் போன்ற பயிற்சி நிலையங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான கல்வித் தகைமை ஜி.சி.ஈ. சாதாரணதரப் பரீட்சையில் கணிதம் சீ உள்ளடங்கலாக 6 பாடங்களில் சித்தி அல்லது கணிதம் எஸ், ஆங்கிலம் எஸ் உள்ளடங்கலாக 6 பாடங்களில் சித்தியும் ஜி.சி.ஈ. உயர்தரத்தில் இரண்டு பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

இதேவேளை கணனி வன்பொருள் தொழில்நுட்பவியலாளர் பயிற்சி நெறியில் தேசிய தொழில் தகைமைச் சான்றிதழ் பெற யாழ்ப்பாணம் பயிற்சி நிலையத்துக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான கல்வித்தகைமை ஜி.சி.ஈ. சாதாரணதரம் வரை கல்வி கற்றிருத்தல் வேண்டும்.

தகுதி உடையவர்கள் முழுப்பெயர், முகவரி, பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை இலக்கம், கல்வித் தகைமைகள், பயில விரும்பும் பயிற்சி நிலையம் என்பவற்றைக் குறிப்பிட்டு சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை மாவட்ட முகாமையாளர், இல 44 சோமசுந்தரம் வீதி, சுண்டுக்குழி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட அலுவலர் அறிவித்துள்ளார்.

Related posts: