தகவல் அறியும் சட்ட நடைமுறை தொடர்பில் ஆராய்வு- கலாநிதி கலான் சூரிய!

தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த 3 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் எதிர்நோக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்தும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சும் தகவல் திணைக்களமும் ஆராய்ந்திருப்பதாக தகவல்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்ககலான் சூரிய தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது. இதன்போது தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலான்சூரிய இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
இந்த தகவல்அறியும் சட்டம் நடைமுறை தொடர்பில் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் குறித்தவிடயங்களை அனைவரினாலும் சமர்ப்பிக்கமுடியும். இதுதொடர்பில் ஆழமாக கவனம் செலுத்தி தேவையான மாற்றங்களுக்கு வழிவகை செய்யப்படும் என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கஜந்த கருணாதிலகவும் இது தொடர்பில் கருத்துக்களை தெரிவித்தார்.
Related posts:
|
|