தகவல் அறியும் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Friday, April 1st, 2016

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்திற்கு எதிராக தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் சங்க உத்தியோகத்தர்களால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தேச சட்டமூலத்தின் இரண்டு சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை எனவும் அவற்றைப் நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையின்றி நிறைவேற்ற முடியாதெனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு தொடர்பில் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: