டொல்பின் மற்றும் திமிங்கிலங்களை பிடிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Friday, October 14th, 2016

இலங்கையில் டொல்பின் மற்றும் திமிங்கிலங்களை பிடிக்கும் தனிப்பட்ட நபர் அல்லது குழுக்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை   மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கெதிராக நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

டொல்பின் மற்றும் திமிங்கிலம் பிடிக்கப்படுவது சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்டுள்ளது. மிகவும் அரிய வகையான இவற்றை பாதுகாப்பது நாட்டின் கடமையாகும். மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவார்களாயின் அவர்களது அனுமதிப்பத்திரம் ரத்துச்செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

f4c4fcc3fc5c577e7122dae51deff601_L

Related posts: