டெங்கு நோய்த்தொற்று வடமராட்சியில் தீவிரம் பெப்ரவரியில் மட்டும் 77பேர் பாதிப்பு!

வடமராட்சி பிரதேசத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 77பேர் டெங்கு நோய்த்தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோய்த்தொற்று அதிகரித்து வருவதையடுத்து பருத்தித்துறை கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் டெங்கு நுளம்பு உற்பத்தியைத் தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சியில் டெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான 77பேரில் 52பேர் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவையும் 25பேர் பருத்தித்துறை அதிகார பிரிவையும் சேர்ந்தவர்கள் டெங்கு நோய்தொற்று அதிகரித்து வருவதனால் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமான முன்னெடுக்கப்படுகின்றன.
கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கடந்த 28ஆம் திகதி முதல் கிராம அலுவலர்கள், பொலிஸ் அதிகாரிகள், சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினரால் கிராமங்கள் தோறும் டெங்கு நோயைக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதுவரை கரணவாய் வடக்கு, கரணவாய் தெற்கு நெல்லியடி கிழக்கு போன்ற கிராமங்களில் உள்ள அனைத்துக் குடியிருப்புகளையும் டெங்கு நோய்த் தடுப்புப் பிரிவினர் நேரில் சென்று பார்வையிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என சுகாதாரத்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|