டெங்கு நோய்த்தொற்று தென்மராட்சியில் தீவிரம்!

தென்மராட்சி பிரதேசத்தில் பெப்ரவரி மாதத்தில் மட்டும் 100பேர் டெங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் திணைக்கள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சாவகச்சேரி வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் கடந்த மாதம் சிகிச்சை பெற்ற நோயாளர்களில் 105 பேருக்கு டெங்கு நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களில் 100பேர் தென்மராட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் 5பேர் ஏனைய பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.
கடந்த ஜனவரி மாதம் டெங்கு நோய்த்தொற்குள்ளாகி சிகிச்சை பெற்ற 84பேரில் 5பேர் ஏனையவர்கள் பிரதேசங்களை சேர்ந்தவர்கள். ஏனையோர் தென்மராட்சிப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். டெங்கு நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களின் குடியிருப்புகள் உட்பட சுற்றாடலில் டெங்கு நுளம்பை அழிக்கும் புகையூட்டல் நடவடிக்கைகள் சாவகச்சேரி நகரசபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபை ஆகியவற்றின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Related posts:
|
|