டெங்கு நோயின் தாக்கம் வீழ்ச்சி!

Saturday, December 8th, 2018

கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் ஹசித்த திசேரா குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருந்தமையே டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக நிகழும் மழையுடனான வானிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சிகண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: