டெங்கு தொற்று தென்மராட்சியில் கட்டுப்பாட்டுக்குள் சுகாதாரத்துறை தகவல்!

dengue-page-upload-1 Monday, March 20th, 2017

தென்மராட்சிப் பிரதேசத்தில் டெங்கு நோய்த் தொற்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்தாகவும் கடந்த வாரப் புள்ளி விவரங்களின் படி டெங்கு நோய்த் தொற்று இங்கு குறைவடைந்துள்ளது என்றும் சாவகச்சேரி மருத்துவ அதிகாரி அலுவலகத் தகவல் தெரிவித்துள்ளன.

கடந்த 11ஆம் திகதி வரையான மார்ச் மாதத்தின் முதலிரு வாரங்களில் டெங்கு நோய்த் தொற்றுக்ள்ளாகிச் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 120 தாண்டியிருந்தது. கடந்த 12ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில் டெங்கு தொற்றால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15ஆகக் குறைந்திருந்தது.

தற்போது நிலவும் வெப்பம் மற்றும் பிரதேச மக்களுக்கு வழங்கப்பட்ட விழிப்புணர்வு காரணமாக டெங்கு நோய்த் தொற்று குறைவடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது  சாவகச்சேரி வைத்தியசாலையில் டெங்கு தொற்றுக்குள்ளாகிச் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குவைடைந்துள்ளது. பெப்ரவரி மற்றும் மார்ச் மாத முற்பகுதியில் டெங்கு நோய்த் தொற்றுக்குள்ளாகியவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக 4 விடுதிகள் நிறைந்திருந்தன என்று சாவகச்சேரி வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


30595327_1734584803247266_6799777560008851456_n

போற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு!…