டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்!

Thursday, March 23rd, 2017

கிழக்கு மாகாணத்தில் டெங்கு கட்டுப்பாட்டு பணிகளில் படைப்பிரிவைச்சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளுர் சுகாதார அதிகாரிகள் டெங்கு நோய் தொடர்பாக விஷேட ஜனாதிபதி செயலணி மற்றும் சுகாதார அமைச்சிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க மேற்படி வீரர்கள் குறித்த பணியினை மேற்கொண்டுவருகின்றனர்.

விசேடமாக திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு நோயினை தடுக்கும் வகையில் நுளம்புகள் பெருகும் இடங்களை கண்டறிந்து அதனை அழிக்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த பிரதேசத்தில் சிறு குழந்தை மற்றும் கர்ப்பிணி தாயுட்பட பலர் இந்த உயிர்கொல்லி டெங்கு நோயின் திடீர் தாக்கத்தினால் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 22, 23ம் மற்றும் 24ம் படைப்பிரிவினர் கிண்ணியா, திருகோணமலை, உப்புவெளி, மட்டக்களப்பு மற்றும் கல்முனை ஆகிய பாதிக்கப்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் மேலும் பரவாது அதனை தடுக்கும் வகையிலான செயற்பாடுகளிலும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts:

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றத்துக்காக இதுவரை 17 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு எதிராக வழக்கு - பொலிஸ்...
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அனைத்து காணிகளையும் சேகரித்து உடனடியாக காணி வங்கியொன்றை தயார...
8 இலட்சம் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்க ஏற்பாடு - பாடசாலைக் கல்வியையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை -...