டெங்கு ஒழிப்பு : தென் மாகாணத்தில் வெற்றி!

தென் மாகாணத்தில் தீவிரமாக பரவியிருந்த டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்த மாகாண சுகாதார பணிப்பாளர் டீ.விஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மாகாணத்தின் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் டெங்கு நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்த முடிந்ததாகவும் சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் முதல் மூன்று மாத காலப்பகுதியில் தென் மாகாணத்தில் மூவாயிரத்து 500 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். ஆனால் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் ஐந்து நோயாளிகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.
Related posts:
கொலையாளி தொடர்பான தகவல்தர பொதுமக்களிடம் கோரிக்கை!
முதலாவது நேர்முகத் தேர்வுடன் அரச வேலை வழங்க வேண்டும் - வடமாகாண பட்டதாரிகள் வலியுறுத்து!
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
|
|