டெங்குக் கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்களுக்கு -அடையாள அட்டை வழங்கப்படுகின்றது!

Thursday, February 1st, 2018

வடக்கு மாகாணத்தில் நியமிக்கப்பட்டுள்ள டெங்குக் கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நிலைமைகளை கருத்தில் கொண்டு கொழும்பு சுகாதார அமைச்சால் வடக்கு மாகாணத்துக்கு 40 டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் நேரடியாக கொழும்பு சுகாதார அமைச்சின் ஊடாக நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் சேவையில் உள்ள காலத்தில் இவர்களுக்கான அடையாள அட்டை அவசியம் என்பது தொடர்பில் துறை சார்ந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமைவாக கொழும்பு அமைச்சால் தற்போது உத்தியோகத்தர்களுக்கான ரிசேட் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் பிராந்திய சுகாதார பணிமனையின் கீழ் சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:

தகவல்களை வழங்க மறுக்கும் அரச ஊழியர்களுக்கு எதிராக தாபன விதிக்கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படு...
போராட்டம் முன்னெடுத்த காலம் தவறானது - அனைவரும் 21 ஆம் திகதி பணிக்குச் சென்று கடமையில் ஈடுபட வேண்டும...
கட்டுமானத்துறை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு - முன்மொழிவுகள் அடங்கிய விசேட அமைச்சரவை பத்திரமொன்றை...