டிப்ளோமா ஆசிரியர் கடமையேற்பு கால எல்லை ஒக்.28வரை நீடிப்பு!
Thursday, October 20th, 2016கல்வியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறிய டிப்ளோமா பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நியமனம் தொடர்பாக, கல்வி இராஜாங்க அமைச்சுக்கு முன் வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
முறைப்பாடுகளை முன்வைத்தவர்களின் கடமை பொறுப்பேற்பு திகதி எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். கொழும்பு கல்வி அமைச்சில், கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டி ஆராச்சி மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருடனான சிறப்பு கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறிய டிப்ளோமா பட்டதாரிகள், கேட்டுக்கொண்ட மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்கள் அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலேயே கல்வி அமைச்சுக்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. முறைப்பாடுகளை முன்வைத்த ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்கள் அனைவருக்கும் அவரவருடைய பாடசாலைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அனைவரும் தமது மாகாணக் கல்விப் பணிப்பாளரைச் சந்தித்து அதனைச் செய்துகொள்ள முடியும். அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பாடசாலையில் மாகாணத்துக்குச் சென்று தமது கோவைகளைப் பெற்றுக்கொண்டே தமது மாகாணக் கல்விப் பணிப்பாளரைச் சந்திக்கவேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|