டிக்வெலவின் போட்டி தடைக்கு மாற்றுவழி கோரும் பிரதமர்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் விதிக்கப்பட்ட தடையினை எதிர்த்து மேன்முறையீடு செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவிற்கு இது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலையீட்டினால் டிக்வெல்லவினது போட்டித் தடைக்கு மாற்றுவழிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்லவிற்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது T-20 போட்டியின்போது, நடுவரின் தீர்ப்பிற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். இது சர்வதேச கிரிக்கட் பேரவை விதிமுறைகளுக்கு முரணானதென தற்போது நிரூபிக்கப்பட்டது.
இதற்கமைய அவருக்கு இன்று இடம்பெறவுள்ள T-20 போட்டியிலும் ஒரு நாள் போட்டியொன்றிலும் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிரோஷன் திக்வெல்ல இலங்கை அணியில் தற்போதைய சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும், ஐ.பி.எல் போட்டிகளின் கொல்கத்தா அணியிலும் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|