ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி!

Saturday, March 25th, 2017

அரசியல் நடவடிக்கைகளுக்காக சதொச பணியாளர்கள் 153 பேரை பயன்படுத்தி அரசுக்கு ரூபாய் 40 மில்லியனுக்கும் அதிகம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த 5 வழக்குகள்  நேற்று(24) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு அமைய 3 மாத காலம் அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற வளாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பின்னர் குறித்த வழக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.

Related posts: