ஜூலை 3 வரை நாளாந்தம் 3 மணி நேர மின்வெட்டு – அனுமதி கொடுத்தது பொது பயன்பாடுகள் ஆணைக்குழு !

ஜூன் 27 ஆம் திகதிமுதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், A முதல் W வரையான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
CC வலயங்களில் எதிர்வரும் ஜூலை 2, 3 ஆம் திகதிகளை தவிர, காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை 2 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
MNOXYZ வலயங்களில் அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அதிக விலைக்கு அரிசி விற்றால் 100 ஆயிரம் தண்டம் - அமைச்சரவையில் தீர்மானம்!
உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் இயந்திரங்களாக மாறியுள்ளது வங்காள விரிகுடா பிராந்திய பொருளாதாரங்கள...
விலைச்சூத்திரத்துக்கமைய ஜூன் 24 இல் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் - தரையிறக்கப்படும் எரிவாயு சுகா...
|
|