ஜூலை 12 ஆம் திகதியுடன் பொதுமன்னிப்பு காலம் நிறைவு!

இராணுத்திலிருந்து தப்பிச் சென்ற 8 ஆயிரத்து 145 இராணுவ வீரர்கள் பொது மன்னிப்பின் கீழ் சட்டரீதியாக இராணுவ சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர சிறிசேன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதில், 7415 இராணுவத்தினரும் 417 கடற்படையினரும் 313 விமானப்படையினரும் உள்ளடங்குவதாக. அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த பொதுமன்னிப்பு காலம் எதிர்வரும் மாதம் 12 ஆம் திகதி வரை நடைமுறையில் இருப்பதுடன், முப்படைகளிலிருந்தும் சேவையிலிருந்து தப்பிச் சென்றுள்ள வீரர்கள் அதற்கு முன்னர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கொரோனா தொற்றின் வேகம் முன்னரை விட அதிகம் - தடுப்பதற்கு பொது மக்களின் முழுமையான பங்களிப்பு அவசியம் -...
பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்க எந்தவித திட்டங்களும் இல்லை - வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்...
முப்படையினர் பொலிசாருடன் வடக்கின் புதிய ஆளுநர் சந்திப்பு - பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆர...
|
|