ஜூலை 11 நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாம் – மே 12 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்க வாய்ப்பு!

நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 20 ஆம் திகதியன்று நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை செய்வதற்கு காலஅவகாசம் போதாமையால், தேர்தல் மீண்டுமொரு தடவை ஒத்திவைக்கப்படவுள்ளதாக கூறுப்படுகின்றது.
இதுதொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில் கட்சி செயலாளர்கள், சுயேட்சைக்குழுக்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன், எதிர்வரும் 12 ஆம் திகதியன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பின் போது, ஜூலை 11 ஆம் திகதியை தேர்தல் நடைபெறும் திகதியாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் செய்திகள் கூறுகின்றன.
Related posts:
கிளிநொச்சியில் சடலம் மீட்பு- குழப்பத்தில் பொலிஸார்?
கணினி அறிவுமட்டத்தில் முல்லைத்தீவு பின்னடைவு!
நிதி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் பஷில் ராஜபக்ச!
|
|