ஜப்பான் இலங்கை வர்த்தக கண்காட்சி செப்டம்பர் மாதம்!

Saturday, July 23rd, 2016
12 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜப்பான் இலங்கை வர்த்தக கண்காட்சி செப்டம்பர் மாதம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் 24 மற்றும் 25ம் திகதிகளில் ஜப்பானின் டோக்கியோ நகரில் இக்கண்காட்சி இடம்பெற உள்ளதாக ஜப்பானிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்து.

இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலா மற்றும் வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக ஜப்பானிலுள்ள இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை வியாபாரிகள் சங்கம் ஆகியன இணைந்து இதை ஏற்பாடு செய்துள்ளது.தேயிலை, ஆடைகள், தேங்காய், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், உணவு, பரிசு பொருட்கள், கைப்பணி பொருட்கள், ஆயுர்வேத உற்பத்தி, வங்கி ஆகிய துறைகளை சேர்ந்த வர்த்தகர்கள் இதில் கலந்துகொள்ளுமாறு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிலுள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்பு கொள்ளலாம்   அல்லது அதன் இணையத்தளத்தின் ஊடாக  ஊடாக மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்

Related posts: