ஜப்பானிய பிரதமருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு – சிறந்த தொழில் தகைமைகளை கொண்ட இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு வழங்கவும் இணக்கம்!
Wednesday, September 28th, 2022ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவிற்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.
டோக்கியோவில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் எதிர்கால பொருளாதார திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
இதேவேளை
சிறந்த தொழில் தகைமைகளை கொண்டவர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யொஷிமாசா ஹயாஷி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மற்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 2023 ஆண்டில் சிறந்த தொழில் தகைமைகளை கொண்டவர்களுக்கு ஜப்பானில் பல்வேறு துறைகளிலும் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அந்நிய செலாவனி பற்றாக்குறையினால் இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொஷிமாசா ஹயாசி குறிப்பிட்டுள்ளார்
இந்நிலையில் பிலிப்பைன்ஸின் மெனிலா நகரில் ஆரம்பமாகவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|