ஜனாதிபதி வேட்பாளர் நான்தான் – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய !
Tuesday, July 2nd, 2019ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தான் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார.
ஏனைய கட்சிகளின் ஆதரவுகளை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிபிசி செய்தி சேவைக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் தான் வெற்றி பெற முடியும் என நம்புவதாகவும், தனது அமெரிக்க குடிரிமையை நீக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க நீதிமன்றத்திற்கு முன்னால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை அடிப்படையற்றதெனவும், அவை அரசியல் நோக்கத்திற்கமைய முன்வைக்கப்பட்டதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடங்களில் அமெரிக்கா சென்ற போது தாக்கல் செய்யாத வழக்கு தற்போது ஏன் தாக்கல் செய்யப்பட்டதென வினவியவர், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதனை தடுப்பதற்காக எதிராளிகளுக்கு அவசியம் ஏற்ட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாள் அமைக்க போகும் ஆட்சியின் போது அடிப்படைவாத பயங்கரவாதிகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட இராணுவ புலனாய்வு பிரவு ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக கோத்தபாய மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|