ஜனாதிபதி சட்டத்தரணியானார் சுமந்திரன்!
Friday, April 28th, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 25 சிரேஷ்ட சட்டத்தரணிகளை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமித்துள்ளார். இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரனும் உள்ளடங்கியுள்ளார்
அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சட்ட தொழிலில் சிறப்பாகவும் நேர்மையாகவும் பணியாற்றிய சட்டத்தரணிகள் சிலர் இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தயா பெல்பொல, ஆரிய பீ. ரெக்கவ, நெவில் அபேரத்ன, உபுல் ஜயசூரிய, ஜே.சி. வெலியமுன, எம்.ஏ. சுமந்திரன், மொஹமட் நிசாம் காரியப்பர் உட்பட 25 சட்டத்தரணிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
வடக்கிலுள்ள 249 பாடசாலைகளுக்கு விரைவில் ஆய்வு கூட உபகரணங்கள்!
மக்கள் வங்கியின் 2020 ஆண்டறிக்கை கௌரவ பிரதமருக்கு வழங்கி வைப்பு!
தபால் திணைக்களத்தினை போன்ற போலி இணையத்தளத்தை பயன்படுத்தி பண மோசடி - பாதுகாத்துக் கொள்ளுமாறு தபால் மா...
|
|