ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் முடக்கம்!

Sunday, May 7th, 2017

கடந்த காலத்தில் நடந்ததாக கூறப்படும் பெரியளவிலான மோசடிகள், ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் சம்பந்தமான விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் ஸ்தம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

கடந்த அரசாங்கத்திற்கு எதிரான புதிய முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் பணிகள் கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது. இந்த நிலையில், ஆணைக்குழுவின் பணிகள் ஸ்தம்பித்துள்ளதாக பேசப்படுகிறது. ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பதவிக்காலம் நீடிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Related posts: