ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்டம் தீட்டிய பெண்ணுக்கு இரண்டு வருட கடூழிய சிறை !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக கடமையாற்றிய போது அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்ட நபருக்கு பத்து வருட ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியசிறைத் விதிக்கப்பட்டுள்ளது.
62 வயதான குறித்த பெண்ணுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி பொரலஸ்கமுவ பிரதேசத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலால் மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயற்சித்த தரப்பினருக்கு தங்கு இடம் வசதி பெற்று கொடுத்துள்ளார். இதன்படி கொலை செய்வதற்கு திட்டமிட்டமையின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அந்த பெண்ணிற்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை செலுத்தாவிடின் சிறைத் தண்டனை மேலும் 6 மாதம் அதிகரிக்க கூடும். செல்வகுமார் வேலமணி என்ற குறித்த பெண், வவுனியா பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
Related posts:
|
|