ஜனாதிபதியின் சகோதரர் கொலை: குற்றவாளிக்கு 18 ஆண்டுகள் சிறை!

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரைப் படுகொலை செய்த குற்றவாளிக்கு 18 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட பிரியந்த சிறிசேனவின் மனைவிக்கு 10 லட்சம் ரூபா இழப்பீடும் நீதிமன்றத்துக்கு அபராதத் தொகையாக 20 ஆயிரம் ரூபாவும் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.
இழப்பீட்டுத் தொகையை செலுத்தத்தவறினால் மேலதிகமாக இரண்டு வருட சிறைத்தண்டனையும் தண்டத் தொகையை செலுத்தத்தவறும் பட்சத்தில் மேலதிகமாக ஆறு மாதச் சிறைத் தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதி நிமல் ரணவீர தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புனரமைப்புச் செய்யப்படவுள்ள 22 வீதிகள்
பாதுகாப்பபு தரப்பினர் இருவரையும் ஜூலை 9 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
நாளைமுதல் கல்கிஸ்ஸையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் குளிரூட்டப்பட்ட கடுகதி இரயில்சேவை!
|
|