சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ள நாடாளுமன்ற தொகுதி?

எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் காணப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வு அறைகள், அலுமாரிகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒட்டுமொத்த நாடாளுமன்ற வளாகமும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் இது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் தினமன்று, நாடாளுமன்றின் பொதுமக்கள் பார்வைக் கூடம் மூடப்பட்டிருக்கும் எனவும், விசேட பிரமுகர்கள் மட்டுமே அமர்வினை பார்வையிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனத் தரிப்பிடமும் மூடப்பட்டிருக்கும் எனவும், வாகனங்களை நிறுத்த விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது இவ்வாறு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது மற்றும் சோதனையிடுவது வழமையானது என நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
|
|