சைட்டத்தை நிராகரித்ததற்கு பிரிட்டிஷ் மருத்துவ சபை விளக்கம்!

சைட்டம் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பட்டங்களை ஏற்றுக்கொள்ளாமை தொடர்பாக பிரித்தானிய மருத்துவ சபை விளக்கமளித்துள்ளது.
சைட்டம் மருத்துவக் கல்லூரி இலங்கையில் இயங்கும் காரணத்தால் அதன் மருத்துவப் பட்டங்கள் இலங்கை மருத்துவ சபையினால் அனுமதிக்கப்பட வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்றால் மாத்திரமே சர்வதேச ரீதியில் இந்தப் பல்கலைக்கழக மாணவர்களின் மருத்துவத் தகுதி ஏற்றுக்கொள்ளப்படும்.
ஆனால், இலங்கை மருத்துவ சபை சைட்டம் கல்லூரியின் மருத்துவப் பட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் காரணமாகவே பிரித்தானிய மருத்துவ சபையும் அதனை அங்கீகரிக்காதுள்ளது.
இத் தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் இலங்கை மருத்துவ சபையிடம் அனுமதி பெறப்படுவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரித்தானிய மருத்துவ சபை அறிவித்துள்ளது.
Related posts:
இலங்கை போக்குவரத்துச் சபை தனியார் மயப்படுத்தப்பட மாட்டது- பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பம் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜி...
எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய் கசிவு என வெளியாகும் சேய்தி உண்மைக்கு புறம்பானது - இராஜாங்க அமைச...
|
|