சேவையில் ஈடுபட்டுள்ளோர் தொடர்பான தொகைமதிப்பு!

Friday, November 4th, 2016

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற அரச மற்றும் அரச சார்பற்ற சேவையில் ஈடுபட்டுள்ளோர் தொடர்பான தொகை மதிப்பு, எதிர்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.ஜே சத்திரசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுவாக 4 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் இத்தொகைமதிப்பு இம்முறை 11 தடவையாக நடத்தப்படவுள்ளது. தகவல் சேகரிக்கும் நடவடிக்கையை வெற்றிகாரமாக பூர்த்தி செய்யும் பொருட்டு இத் தொகைமதிப்பு, சகல மற்றும் அரச சார்பற்ற சேவையில் ஈடுபட்டுள்ளோரின் பங்களிப்புடன், குறித்த தினத்தன்று காலை 9.30 மணி மதல் முற்பகல் 11.30 மணி வரையான நேரப் பகுதியில் மேற்கொள்ளப்படுமென தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொகை மதிப்பு சம்பந்தமாக இங்கு உள்ளடக்கப்பட்ட தகவல்களைத் தொகை மதிப்புத் தினத்திற்க முன் பரிசீளித்து இத்தொகை மதிப்பை வெற்றிகரமாக மேற்கொள்ள ஒத்துழைக்குமாறு தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம். மற்றும் அரச சார்பற்ற சேவையில் ஈடுபட்டுள்ளோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

 samurdhi copy

Related posts: