சேற்றுக்குள் சிக்கிய இளைஞன் உயிரிழப்பு – ஆழம் பார்க்க இறங்கியபோது விபரீதம்!

Monday, November 28th, 2016

ஆழம் பார்ப்பதற்காக மதகுக்குள் இறங்கிய இளைஞன் ஒருவர் சேற்றுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று மாலை 6மணியளவில் நாவற்குழி 300 வீட்டுத்திட்டப் பகுதியில் அமைந்துள்ள மதகு ஒன்றில் இடம்பெற்றத.

இதில் அதேயிடத்தைச் சேர்ந்த யேசுதாஸன் அமிநதாப் (வயது-20) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார். சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

death331

Related posts: