சேமநலனுக்கு பிரதேச சபை நிதியை பயன்படுத்தும் வகையில் சட்டத்தில் திருத்தம்!
Thursday, September 28th, 2017
பெருந்தோட்ட மக்களின் குடியிருப்புக்களுக்கு தேவையான பொது பயன்பாட்டுக்கான சேவைகளை வழங்குவதற்காக பிரதேச சபை நிதியை பயன்படுத்தக்கூடிய வகையில் 1987ம் ஆண்டு 15ம் இலக்க பிரதேச சபை சட்டத்தினை திருத்தம் செய்வதற்காக ஏற்கனவே அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காணி அபிவிருத்தி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை துணை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மகாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:
இதனடிப்படையில் குறித்த சட்டமூலத்தினை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசல் முஸ்தபாவினால் முன்வைக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.
Related posts:
|
|