சேதனப் பசளை உற்பத்தியாளர்களுக்கு உதவி திட்டம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/12/1c3788814d826e584b7397d04f77ce57_XL.jpg)
விவசாயிகளுக்கு உரமானியத்தை வழங்குவதற்கான பணிகள் மூன்று வாரங்களுக்குள் பூர்த்திச் செய்யப்படும் என்று விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் விஜித சந்திர பியதிலக தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கம்பஹா மாவட்ட விவசாயிகளுக்கு உரமானியம் வழங்க தகவல் திரட்டப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
சேதனப் பசளை உற்பத்தியாளர்களுக்கு உதவி செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட கமநல சேவையாளர் ஆணையாளர் ஏ.கே.என். விக்ரமசிங்க இது பற்றிய மேலதிக விபரங்களை தொலைபேசி வாயிலாக பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 0714-429-833 என்றார்.
விவசாயிகளுக்கு உரமானியத்தை வழங்குவதற்காக தற்போது இடம்பெற்றுவரும் நடவடிக்கை தொடர்பாக இலங்கை ஒலி பரப்புக்கூட்டுத்தான நிகழ்ச்சி ஒன்றில் இந்த விடயங்களை அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் ,
பெரும்போக பயிர் செய்கையில் ஈடுபடும் எட்டு இலட்சம் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கப்படும். இதற்காக தொளாயிரத்து 47 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஏனைய மாவட்டங்களில் துரிதமான தகவல் திரட்டப்பட்டுவருகின்றன. சீரற்ற காலநிலையினால் பல மாவட்டங்களில் நெற் செய்கை பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. இதனால் உரமானியத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்வதில் பிரச்சினையாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு 645 கோடி ரூபா செலவில் ஏழரை இலட்சத்திற்கு மேலான விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கப்பட்டது. இவர்களில் ஒன்றரை இலட்சத்திற்கும் மேலான விவசாயிகள் பயிர் செய்கையில் ஈடுபடவில்லை. இந்த விவசாயிகள் கடந்த ஆண்டு கிடைத்த உரமானியத்தை இவ்வாண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று கமநல சேவையாளர் ஆணையாளர் ஏ.கே.என். விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|