செவ்வாயன்று புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான புதிய கூட்டு ஒப்பந்தத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், கைச்சாத்திடுவதென நேற்றைய பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வருடத்தில் 300 நாள் வேலை வழங்கப்பட வேண்டும் என்ற பிரதான உடன்படிக்கையில் மாற்றம் செய்யக்கூடாது எனும் சங்கங்களின் கோரிக்கையை, பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிகள் நேற்றும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், அந்தக் கோரிக்கையின் நியாயத்தன்மையை ஏற்றுக்கொண்ட அமைச்சர்கள் நவீன் திசாநாயக்கவும் ஜோன் செனவிரத்னவும் பிரதமரிடம் இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி, முதலாளிமார் சம்மேளனத்தை இணங்கச் செய்வதாக உறுதியளித்துள்ளனர். இதன் அடிப்படையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (18) புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
|
|