செயற்கை கண் வில்லைகளின் விலை குறைவடையும்!

அதிக விலைக்கு கண் வில்லைகளை விற்பனை செய்யும் மோசடி வேலைத்திட்டம், முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு, அந்த செயற்கைக் கண் வில்லைகளின் விலையைக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், கண் தொடர்பான சத்திர சிகிச்சைகளுக்காக, அரசாங்கம் வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளிகளுக்கு, இலவசமாக செயற்கைக் கண் வில்லைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், சுமார் ஒரு இலட்சம் செயற்கை கண் வில்லைகளை இறக்குமதி செய்வதற்கு, அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அரச வைத்தியசாலைகளில், செயற்கை கண்வில்லைகளுக்கு தட்டுப்பாடு நிலவினால், அவற்றை நிவாரண விலையில் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான நிதி உதவிகளை, வைத்தியசாலைப் பணிப்பாளர்களுக்கு வழங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை, கொள்கை ரீதியிலான தீர்மானமாக அமுல்படுத்துவதற்கு, தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவிலிருந்து ஆறாயிரம் ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படும் செயற்கை கண் வில்லைகள், இலங்கையில் 25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|