சுற்றிவளைப்பில் சிக்கிய 484 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

Thursday, August 25th, 2016

சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ள உணவு பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மற்றும் சுற்றிவளைப்புக்கள் மூலம் 484 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் 11,125 வர்த்தக நிலையங்கள் சோதனையிடப்பட்டதாகவும் பொதுசுகாதார பரிசோதனை அதகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது காலாவதியான உணவுகள், பழுதடைந்த உணவுகளை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுகாதார பொதுபரிசோதக அதிகாரிகளின் தகவலுக்கமைய சுத்தமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்படி 10,603 உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts: