சுற்றாடல் பாதுகாப்பிற்கு 350 பட்டதாரி அபிவிருத்தி அதிகாரிகள் நியமனம் – சுற்றாடல் அமைச்சு!

Saturday, April 3rd, 2021

சுற்றாடலை பாதுகாப்பதற்காக பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு 350 பட்டதாரி அபிவிருத்தி அதிகாரிகளை இணைத்துக் கொள்ளவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது..

இந்த அபிவிருத்தி அதிகாரிகள் நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர் அலுவலங்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் அலுவலகங்களில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது..

இதேநேரம் இதற்கான முதலாவது குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டோருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன என்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

.

Related posts: