சுற்றாடலுக்கான 2017 ஜனாதிபதி விருதுக்கு விண்ணப்பங்கள் கோரல்!
Friday, March 10th, 20172017 ஆண்டின் ஜனாதிபதி சுற்றாடல் விருதுக்கான விண்ணப்பங்கள் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் கோரப்பட்டுள்ளன.
சுற்றாடலைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் இலங்கை பிரஜைகளை தேசிய மட்டத்தில் பாராட்ட வேண்டுமென்ற ஜனாதிபதியின் யோசனைக்கு அமைய இந்த விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருதுக்கான விண்ணப்பங்களை மும்மொழிகளிலும்அனுப்பிவைக்கமுடியும். இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக இவற்றிற்கான விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்.
www.cea.lk என்ற மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக அல்லது பிரதான அலுவலகத்தில் அல்லது மாகாண மற்றும் மாவட்ட அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 011-2872419 அல்லது 011-2872278 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ளமுடியும்.
Related posts:
இலங்கையின் தொழில்நுட்பத்தை அழித்தொழிக்கும் எட்கா வேண்டாம் - ரில்வின் சில்வா
கடல் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை - வளிமண்டலவியல் திணைக்களம்!
வறட்சியான காலநிலையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சி - மக்களின் நீர் பாவனை அதிகரிப்பு - கா...
|
|